• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மே 27 முதல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் துவங்குகிறது

May 25, 2026 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம், கடந்த 58 ஆண்டுகளாக ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியையும், கடந்த 22 ஆண்டுகளாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. நாட்டின் முன்னணி கூடைப்பந்து அணிகள் பங்கேற்பதில் பெருமை கொள்ளும் அளவிற்கு இப்போட்டி சிறப்பும் மரியாதையும் பெற்றதாக திகழ்கிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியும், கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கமும் இணைந்து, சமீபத்தில் சர்வதேச தரத்திலான புதிய செமி-உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்துள்ளன.இந்த ஆண்டிற்கான இப்போட்டிகள் 2026 மே 27 முதல் 31 வரை நடைபெற உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு கூடைப்பந்து கழக துணைத் தலைவரும்,கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும் ஜி. செல்வராஜ்,துணைத் தலைவர்கள் சி.ஆனந்த்,சி.என்.அசோக்,டி.பழனிச்சாமி, நவரத்தன் குமார் பாப்னா,எஸ்.சித்தார்த், மொஹம்மது இஷாக்,செயலாளர் எஸ். பாலாஜி,துணை செயலாளர் எம்.தீபாலா ஆகியோர் கூறியதாவது :-

கோவை மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில்,நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்துடன், கோவை மாநகராட்சி இணைந்து, சர்வதேச தரத்திலான செமி உள்விளையாட்டு அரங்கத்தை அமைத்தது ஆண்களுக்கான போட்டியில் நாட்டின் முன்னணி 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அவை:இந்திய விமானப்படை – புதுடெல்லி, இந்திய இராணுவம் – புதுடெல்லி, இந்திய கடற்படை – லோணாவாலா, கேரள மாநில மின்சார வாரியம் (KSEB) – திருவனந்தபுரம், பேங்க் ஆஃப் பரோடா – பெங்களூரு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – சென்னை, கேரள போலீஸ் – திருவனந்தபுரம், கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் (CDBA) – கோயம்புத்தூர்.

பெண்களுக்கான போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை: சவுத் சென்ட்ரல் ரெயில்வே – செக்கந்தராபாத், சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே – ஹப்ளி, சதர்ன் ரெயில்வே – சென்னை, ஐ.சி.எஃப். – சென்னை, கேரள மாநில மின்சார வாரியம் (KSEB) – திருவனந்தபுரம், சென்ட்ரல் ரெயில்வே – மும்பை, கேரள போலீஸ் – திருவனந்தபுரம், கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் (CDBA) – கோயம்புத்தூர்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுகள் வருமாறு:

ஆண்கள் பிரிவு: வெற்றியாளர் – ரூ.1,00,000 ரொக்கப் பரிசும் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பையும், இரண்டாம் இடம் – ரூ.50,000 ரொக்கப் பரிசும் மற்றும் டாக்டர் என். மகாலிங்கம் கோப்பையும் மற்றும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதும் வழங்கப்படும்.

பெண்கள் பிரிவு: வெற்றியாளர் – ரூ.75,000 ரொக்கப் பரிசும் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பையும், இரண்டாம் இடம் – ரூ.50,000 ரொக்கப் பரிசும் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பையும் மற்றும் சிறப்பாக விளையாடும் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் 2026 மே 27ஆம் தேதி மாலை துவங்குகின்றன. அணிகள் மே 29-ஆம் தேதி வரை லீக் முறையில் போட்டியிடும். அரையிறுதி போட்டிகள் மே 30-ஆம் தேதியும், இறுதிப்போட்டிகள் மே 31ஆம் தேதியும் நடைபெறும். அனைத்து போட்டிகளும் தினமும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வ.உ.சி. பூங்கா உள்விளையாட்டு கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறும். அனைவருக்கும் அனுமதி இலவசம்.

தொடக்க விழா 2026 மே 27ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் துணைத் தலைவரும், கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் தலைவரும், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநருமான திரு. ஜி. செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கிவைத்து விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.

மே 31 ம் தேதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அன்று மாலை 8.00 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்களான சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின் போது கோவை மாவட்ட கூடைப்பந்து கழக இணை செயலாளர்கள் திரு. ராமகிருஷ்ணன் ஏ.ஷாஜுதீன்,கே. வித்யா பிரியா,எம்.சரபோஜி, மற்றும் டாக்டர் எம்.ஜெயசித்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க