• Download mobile app
24 May 2026, SundayEdition - 3756
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயர்கல்வி குடும்பத்திற்காக மட்டுமல்ல; சமுதாயத்தைக் காக்கவும் பயன்பட வேண்டும் – துணைவேந்தர் எம். கிருஷ்ணன்

May 24, 2026 தண்டோரா குழு

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவர் மாரப்பகவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எம். கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

பின்னர் விழாவில் மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில்,

“ஒவ்வொருவரும் உயர்கல்வி பயின்று பட்டம் பெறுவதற்கு முதல் காரணம் பெற்றோர்களே. அவர்கள் தங்களது உறக்கம், மகிழ்ச்சி ஆகியவற்றைத் தியாகம் செய்து பிள்ளைகளை முன்னேற்றுகின்றனர். எனவே பெற்றோர்களைத் தெய்வமாகக் கருதி மதிக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “உயர்கல்வி என்பது தனிநபரின் குடும்பத்தை மட்டும் பாதுகாப்பதற்கானதல்ல;அது சமுதாய முன்னேற்றத்திற்கும் பயன்பட வேண்டும். உயர்கல்வியில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் நாட்டின் கடைக்கோடியில் வாழும் சாதாரண மக்களுக்கும் பயன் அளிக்கும்போது தான் அதன் முழுமையான அர்த்தம் நிறைவேறும்” என்றார்.

கடின உழைப்பு, தனித்திறன், ஒழுக்கம், நேர்மை ஆகிய நற்பண்புகளே ஒருவரை உயர்விற்கு கொண்டு செல்லும் என்றும் அவர் பட்டதாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

முன்னதாக கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமை உரையாற்றினார்.

அவர் பேசுகையில்,

“ஒரு நாட்டின் வளம் என்பது இயற்கை வளம் அல்லது பொருளாதார வளத்தால் மட்டும் தீர்மானிக்கப்படாது. அந்நாட்டின் மக்களின் அறிவு, பண்பாடு, விழுமியங்களும் வளமானதாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பின்னர் கல்லூரி முதல்வர் முனைவர் வே. சங்கீதா விழா நிகழ்வை தொடங்கி வைத்தார். இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் தரவரிசை பெற்ற மாணவர்களுக்கு முதலில் பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 1,068 இளநிலை மாணவர்கள், 235 முதுநிலை மாணவர்கள் மற்றும் 29 முதுநிலை பட்டயப்படிப்பு மாணவர்கள் என மொத்தம் 1,332 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவின் நிறைவில் பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களும் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் படிக்க