May 22, 2026
தண்டோரா குழு
நவீன இந்தியப் பெண்களின் ரசனை, வசதி மற்றும் விழாக்கால அழகை மையமாகக் கொண்டு டாடா நிறுவனத்தின் தயாரிப்பான Taneira நிறுவனம் ‘இனாயா’ என்ற புதிய புடவைத் தொகுப்பை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.3,499 முதல் தொடங்கும் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய கலெக்ஷன், மிக நேர்த்தியான வடிவமைப்பு, நவீன வசீகரம் மற்றும் உன்னதமான தனித்துவத்தை ஒருங்கிணைத்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய பெண்கள் அணிவதில் எளிமையையும், தோற்றத்தில் அழகிய பிரம்மாண்டத்தையும் விரும்பும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ‘இனாயா’ வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எடை குறைந்த, உடலோடு ஒட்டியபடி நளினத்தை வழங்கும் துணி வகைகளால் நெய்யப்பட்டுள்ள இந்தப் புடவைகள், குடும்ப விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், சமூக கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தருணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.இயற்கையின் மாற்றங்கள் மற்றும் பிரபஞ்சத்தின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அப்ஸ்ட்ராக்ட் பூ வடிவங்கள், விண்வெளி வடிவியல் தாக்கங்கள் மற்றும் பரிணாம வடிவமைப்புகள் மூலம் ‘இனாயா’ தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதிகாலை முதல் அந்திப்பொழுது வரை இயற்கையின் வண்ண மாற்றங்களை பிரதிபலிக்கும் நிறங்கள் இந்தப் புடவைகளுக்கு தனித்துவமான பொலிவை அளிக்கின்றன.
இதுகுறித்து தநைரா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜர் கௌதம் கூறுகையில்,
“எங்களது விற்பனையில் 60 முதல் 70 சதவீதம் வரை விழாக்கால ஆடைகளே பங்களிக்கின்றன. ‘Never Look The Same’ என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு, பெண்கள் ஒவ்வொரு தருணத்திலும் தனித்துவமாக தோன்ற வேண்டும் என்பதற்காக ‘இனாயா’ வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
மேலும், கோடை திருமண காலத்தை முன்னிட்டு ‘Valley of Flowers’ மற்றும் ‘Raas’ என்ற புதிய விழாக்கால ஆடைத் தொகுப்புகளையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மலர்ந்த பள்ளத்தாக்குகள் மற்றும் மலர் கலை வடிவங்களில் இருந்து ஈர்ப்பு பெற்ற இந்த கலெக்ஷன்களில் திருமணம் மற்றும் விழாக்காலங்களுக்கு ஏற்ற சேலைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தநைரா நிறுவனத்தின் பிசினஸ் மேனேஜர் ஸ்ரீ வள்ளி மற்றும் கோவை தநைரா பிசினஸ் பார்ட்னர் பரிமளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.