• Download mobile app
15 May 2026, FridayEdition - 3747
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப்ரிகால் நிறுவனத்தின் 2026-ம் ஆண்டுக்கான வருவாய் ரூ.3,963.85 கோடியாக உயர்வு: கடந்த ஆண்டைக் காட்டிலும் 51.24 சதவீதம் அதிகரிப்பு

May 15, 2026 தண்டோரா குழு

ப்ரிகால் நிறுவனத்தின் 2026-ம் ஆண்டுக்கான வருவாய் ரூ.3,963.85 கோடியாக உயர்ந்து கடந்த ஆண்டைக் காட்டிலும் 51.24 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ப்ரிகால் நிறுவனம் 2025-26ம் நிதியாண்டு மற்றும் அந்த ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது. நிதி ஆண்டு 2025-26ன் 4வது காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதேபோல் இந்த நிதி ஆண்டின் 4வது காலாண்டுக்கான ஒருங்கிணைந்த வரிக்கு பிந்தைய லாபம் ரூ. 73.23 கோடியாகவும், ஆண்டுக்கான ஒருங்கிணைந்த வரிக்கு பிந்தைய வருவாய் ரூ.250.80 கோடியாக உள்ளது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் செயல்பாடு குறித்து, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விக்ரம் மோகன் கூறியதாவது:

விநியோகச் சங்கிலி பாதிப்புகள், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக உலகளாவிய வாகனத் தொழில்துறைக்கு நிதியாண்டு 2026 ஒரு சவாலான ஆண்டாக இருந்தது இந்தச் சவால்களுக்கு மத்தியிலும், எங்கள் நிறுவனம் தனது வலிமை மற்றும் சிறப்பான செயல்பாட்டைக் காட்டியது. 2026ம் நிதி ஆண்டுக்கான எங்கள் திட்டத்தின்படி, நேரடி மற்றும் பிற நிறுவனங்களின் இணைப்பின் மூலம் மொத்த வருமானத்தில் ரூ.4,000 கோடி என்ற மாபெரும் இலக்கை நாங்கள் எட்டியுள்ளோம்.

பொறியியல், உள்ளூர் உற்பத்தி, சிறந்த செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளில் நாங்கள் தொடர்ந்து செய்து வரும் முதலீடுகள், உலக அளவில் நம்பகமான வாகன உதிரிபாக உற்பத்தியாளர் என்ற எங்கள் இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன.இந்த ஆண்டில் நாங்கள் பெற்ற அங்கீகாரங்களும் எட்டிய சாதனைகளும் எங்கள் ஊழியர்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன. மேலும், உலக அளவில் போட்டியிடக்கூடிய தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தை உருவாக்கும் எங்கள் நோக்கத்தையும் இது வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

வருங்காலத்தில், உலகளாவிய அரசியல் மாற்றங்களை நிறுவனம் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கும். இந்த மாற்றங்களால் நாணய மதிப்பில் ஏற்ற இறக்கம், பொருள்களின் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. இந்தக் காரணிகளால் பொருட்களின் தேவையும், நிறுவனத்தின் செலவுகளும் பாதிக்கப்படலாம். இதனால் தொழில்துறை முழுவதும் லாபம் குறைய வாய்ப்புள்ளது.

மேலும்,தற்போது நடைபெறும் விரிவாக்கப் பணிகள் மற்றும் அதிகரிக்கும் கட்டுமானச் செலவுகள் நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்களைப் பாதிக்கலாம். வெளியே பல சவால்கள் இருந்தாலும், செலவுகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் சரியான திட்டமிடல் மூலம் அபாயங்களைக் குறைப்பதில் நிர்வாகம் கவனம் செலுத்துகிறது. புதிய தயாரிப்புகளை உருவாக்குதல், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சிறந்த செயல்பாடு ஆகிய முக்கியப் பணிகளில் ப்ரிக்கால் தொடர்ந்து உறுதியாக உள்ளது. இதுவே நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும் என்று தெரிவித்தார்.

இந்த காலாண்டில் ப்ரிக்கால் நிறுவனம் ஒரு தலைமை மாற்றத்தை அறிவித்தது. பல ஆண்டுகளாகச் சிறப்பாக பணியாற்றிய வனிதா மோகன் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.நிறுவனத்தின் வளர்ச்சியிலும், நற்பண்புகள் சார்ந்த கலாச்சாரத்தை உருவாக்குவதிலும் அவரது சிறப்பான தலைமைக்கும் பங்களிப்பிற்கும் இயக்குனர் குழு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, விக்ரம் மோகனை ப்ரிக்கால் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இயக்குனர் குழு நியமித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக, நிறுவனத்தின் வணிக அடித்தளத்தை வலுப்படுத்துதல், சிறந்த செயல்பாட்டை ஊக்குவித்தல், உலகளாவிய கூட்டமைப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான நிறுவனத்தை உருவாக்குவதில் விக்ரம் மோகன் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.அவரது தலைமையின் கீழ், ஒரு முன்னணி வாகன தொழில்நுட்ப நிறுவனமாகத் தனது இடத்தை வலுப்படுத்துவதில் ப்ரிக்கால் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தும்.

மேலும் படிக்க