• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் முதல் காற்று சுத்திகரிப்பு இன்டர்சிட்டி பஸ் சேவை: கோவை–சென்னை வழித்தடத்தில் அறிமுகம்

April 9, 2026 தண்டோரா குழு

நாட்டில் முதன்முறையாக காற்று சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய இன்டர்சிட்டி பஸ் சேவையை IntrCity SmartBus நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

“SmartBus.AQI” எனப்படும் இந்த சேவை, கோயம்புத்தூர்–சென்னை மற்றும் சென்னை–கோயம்புத்தூர் வழித்தடங்களில் வணிக ரீதியாக இயக்கத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, நீண்ட தூர பயணங்களில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு முக்கிய அம்சமான பஸ் உள்ளக காற்று தரத்தை மையப்படுத்துகிறது.

நிறுவனத்தின் உள்துறை ஆய்வுகளின்படி, இன்டர்சிட்டி பஸ்களின் உள்ளக காற்று மாசு அளவு, World Health Organization பரிந்துரைக்கும் அளவை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த சவாலுக்கு தீர்வாக அறிமுகமான SmartBus.AQI சேவையில், PM2.5 அளவு பயண நேரத்தின் 90%க்கும் மேலாக சுமார் 40 µg/m³ அளவில் பராமரிக்கப்படுகிறது. இது பல இந்திய நகரங்களில் காணப்படும் வெளிப்புற காற்று தரத்தை விட குறிப்பிடத்தக்க வகையில் சுத்தமானதாகும்.

பயணிகள், IntrCity மொபைல் செயலி மற்றும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யும் போது “SmartBus.AQI” குறியீட்டின் மூலம் இந்த பஸ்களை அடையாளம் காண முடியும். மேலும், பயணத்தின் போது நேரடி AQI மற்றும் PM2.5 அளவுகள் பஸ்ஸிலும் செயலியிலும் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சேவை குறித்து நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி Manish Rathi கூறுகையில், “கோயம்புத்தூர் முக்கியமான இன்டர்சிட்டி பயண மையமாக உள்ளது. SmartBus.AQI மூலம், பயணிகள் சுத்தமான மற்றும் பாதுகாப்பான காற்றில் பயணம் செய்யும் அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்” என்றார்.

மேலும், இந்த சேவையின் தொழில்நுட்பம் மற்றும் செயல்முறை குறித்து பயணிகள் அறிந்து கொள்ள IntrCity நிறுவனம் தனி மைக்ரோசைட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க