March 26, 2026
தண்டோரா குழு
ஏர்பிஎன்பி நிறுவனத்தின் புதிய விளம்பரத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் அவர்களின் தனிப்பட்ட முறையிலான பயண அனுபவங்கள் இடம்பெற்றுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு அவர்கள் மேற்கொள்ளும் முதல் சுற்றுலாவின் ஒரு சிறு பகுதியை இது வழங்குகிறது – ஒருவருக்கொருவர் நேரம் செலவிடுவது மற்றும் தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவது ஆகியவை இந்தப் பயணத்தின் சிறப்பம்சங்களாக உள்ளன.
கோ சமுய் தீவில் படமாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம்,தம்பதியினர் ஒரு தனிப்பட்ட ஏர்பிஎன்பி வில்லாவைத் தேர்ந்தெடுப்பதையும்,அங்கே அமைதியாக பொழுது போக்குவது போலவும் இது எடுக்கப்பட்டு உள்ளது.அமைதியான காலைப் பொழுது, சமையலறையில் ஒலிக்கும் இசை மற்றும் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்து நீண்ட பேசுவது போன்ற பல்வேறு காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
தம்பதியினர் ஒருவருக்கொருவர் எழுதிக்கொண்ட திருமணக் குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட பின்னணிக் குரல் இதன் மையமாக அமைந்து, கதைக்களத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கிறது.“என் கணவர்… அப்படி அழைப்பதற்கு இன்னும் பழகிக்கொண்டு இருக்கிறேன்”, “எனது சிறந்த நண்பர். அந்த ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை”, மற்றும் “யாரும் பார்க்காதது போல் அவள் எப்போதும் நடனமாடுவாள்” போன்ற வரிகள் விளம்பரம் முழுவதும் ஒலிக்கின்றன. காலை உணவின் போது நடக்கும் வேடிக்கையான உரையாடல்கள், தயக்கமில்லாத நடனம் அல்லது எதிர்காலம் குறித்த பேச்சுக்கள் என அன்றாடத் தருணங்களை மிகவும் தனிப்பட்ட உணர்வுகளுடன் இது காட்டுகிறது.
தங்களின் இந்த அனுபவம் குறித்து விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா கூறுகையில்,
“எங்களைப் பொறுத்தவரை பயணம் என்பது எப்போதுமே எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் புதிய நினைவுகளை உருவாக்குவதுதான். ஏர்பிஎன்பியில் தங்குவது என்பது அதை இன்னும் கூடுதல் சுவாரஸ்யமாக மாற்றுகிறது. நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாகச் சேர்ந்து இருக்கலாம், வெளியே சுற்றலாம், விளையாடலாம், நீச்சல் குளத்தில் விளையாடியபடியே சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கலாம், நல்ல உணவை ருசிக்கலாம் மற்றும் உள்ளூர் கலாச்சாரத்தை மிகவும் உண்மையான, எவ்வித கலப்படமுமில்லாத வகையில் அனுபவிக்கலாம்.
இது ஒரு இடத்திற்குச் சுற்றுலா செல்வதைப் போல இல்லாமல், அந்த இடத்திலேயே வாழ்வதைப் போல இருந்தது என்று தெரிவித்தனர்.கடல் அருகே அமைந்துள்ள இந்த வில்லா, பரந்த பெரிய இடங்கள், நீச்சல் குளம் மற்றும் வசதியான வடிவமைப்பு ஆகியவை சிறந்த அனுபவத்தை வழங்கும். மேலும் இது ஒரு வீட்டின் சௌகரியத்தையும் ஒரு ஆடம்பரமான ஓய்வுப் பயணத்தின் உணர்வையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது.
இந்தப்பயணம் முழுவதும் நண்பர்கள் உடனிருப்பது, இன்றைய காலகட்டத்தில் மக்கள் எப்படிப் பயணம் செய்கிறார்கள் என்பதில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது. ஏர்பிஎன்பி தரவுகளின்படி, இந்தியப் பயணிகளின் கோடைகால சுற்றுலாவானது 40 சதவீதம் ஒரே குழுவாக தங்குவதையே விரும்பவதாக தெரிகிறது. அனைவருடனும் பகிர்ந்துகொள்ளக்கூடிய பயண அனுபவங்களுக்கான விருப்பம் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
தற்போது பயணிகள் தங்களுக்கு மிக நெருக்கமான நண்பர்கள் வட்டத்துடன் தங்கள் வாழ்க்கையின் அர்த்தமுள்ள தருணங்களைக் கொண்டாட அதிகளவில் விரும்புகிறார்கள் – இந்த புதிய கலாச்சாரம் பெரும்பாலும் ‘பட்டிமூன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த விளம்பரப் படத்தின் மூலம் ஏர்பிஎன்பி தனது முக்கிய கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறது: நீங்கள் எங்கு தங்குகிறீர்கள் என்பது மட்டுமல்ல, எப்படித் தங்கத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதுமே முக்கியம். உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சௌகரியத்தை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட இடங்களை வழங்குவதன் மூலம், பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களை உண்மையிலேயே தங்களுடைய சொந்த இடமாக உணரும் வகையில் அனுபவிக்க ஏர்பிஎன்பி வழிவகை செய்கிறது.