• Download mobile app
20 Feb 2026, FridayEdition - 3663
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் திண்டுக்கல் கிளையை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

February 20, 2026 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி தனிநபர் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட திண்டுக்கல் கிளை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்தது.

இந்த அலுவலகத்தை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எம்.பி.திறந்து வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் தனது வலுவான இருப்பை அந்நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த நிகழ்வில் டாப் அனில் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என். சுகுமார்,திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே. ஸ்ரீ சரவணன்,மூத்த மருத்துவ வல்லுநர்கள், ஆலோசகர்கள் மற்றும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் கலந்து கொண்டனர்.

எம்.பி.ஆர்.சச்சிதானந்தம் கூறுகையில்,

“திண்டுக்கல் போன்ற வளரும் மாவட்டங்களில் மருத்துவக் காப்பீட்டுச் சேவைகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். மருத்துவ அவசர காலங்களில் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவது, குறிப்பாக வளர்ந்துவரும் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

சேவைக்கான உள்கட்டமைப்பு மற்றும் வசதியை வலுப்படுத்துவது, விழிப்புணர்வை அதிகரிப்பது போன்றவை இப்பகுதியிலுள்ள அதிகமான குடும்பங்களுக்கு இந்தச் சேவையைக் கொண்டு சேர்க்கவும் உதவும்.” என்றார்.

ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லீட் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் ராய் கூறுகையில்,

“தேசிய அளவில் எங்களது முக்கிய சந்தைகளில் ஒன்றாகத் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த ஒரு மாநிலத்தில் மட்டும் ரூ.9,100 கோடிக்கும் அதிகமான க்ளைம்களை நாங்கள் தீர்வு செய்துள்ளோம். இது எங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும், வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் காலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் எங்கள் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.” என்றார்.

திண்டுக்கல் கிளை தற்போது டவுண் ஏரியாவிலிருந்து மாற்றப்பட்டு, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முக்கிய பிரதான சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகவும், கிளையின் அடையாளத்தை மேம்படுத்தவும் வழிவகை செய்துள்ளது.முக்கியமாக, 60 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள ஒரே ஸ்டார் ஹெல்த் கிளை இதுவாகும்.

இதன் மூலம் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இது ஒரு முக்கிய சேவை மையமாகத் திகழும்.மதுரை மண்டலத்தில் (திண்டுக்கல் உட்பட), ஸ்டார் ஹெல்த் நிறுவனம் 25 கிளைகளுடன் இயங்கி வருகிறது. நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட க்ளைம்கள் தீர்க்கப்பட்டு, 950 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. இது தென் தமிழகம் முழுவதும் நிறுவனத்தின் வலுவான சேவைத் திறனை உறுதிப்படுத்துகிறது.

மேலும் படிக்க