February 20, 2026
தண்டோரா குழு
பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் இந்த வேளையில், நீண்ட கால வளர்ச்சியைப் பெறுவதற்காக சில்லறை முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளைப் புத்திசாலித்தனமாக மாற்றியமைத்து வருகின்றனர்.
குறிப்பாக, தற்போதைய சந்தை நிலையில் நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்யும் ‘மிட்-கேப் மியூச்சுவல் பண்டுகள்’ மீது முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கோவை மக்களிடமும் ‘டாடா மிட்கேப் பண்ட்’ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
உலக அளவில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பெரிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக முன்னேற்றங்கள், வியாபாரிகளுக்கு நல்ல நம்பிக்கையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஒரு நிலையான சூழலை உருவாக்கும். உள்நாட்டில், சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு, உற்பத்தி, மூலதனச் செலவுகள் போன்ற முக்கிய துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த செலவுகள் தனியார் துறை செயல்பாடுகளை ஊக்குவிக்கும் போது, பொருட்களுக்கான தேவையும் அதிகரிக்கும். இது பெரிய நிறுவனங்களை மட்டுமல்லாமல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியோடு இணைந்து செயல்படும் நடுத்தர நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்கும். இதை பிரதிபலிக்கும் வகையில், கடந்த ஆண்டு முழுவதும் மிட்-கேப் பண்டுகளில் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். சமீபத்திய மியூச்சுவல் பண்ட் கூட்டமைப்பு தரவுகளின்படி, மிட்-கேப் பண்டுகளில் வந்த முதலீடுகள், மியூச்சுவல் பண்ட் துறையில் புதிய சாதனை படைக்க உதவியுள்ளன.
இந்த முதலீட்டு வேகம் ஜனவரி மாதத்திலும் தொடர்கிறது; அந்த ஒரே மாதத்தில் மட்டும் மிட்-கேப் பண்டுகளில் ரூ.3,185 கோடி புதிய முதலீடுகள் வந்துள்ளன. இது, மிட்-கேப் பண்டுகள் மீது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது.நாடு முழுவதும் உள்ள இந்த ஆர்வத்தைப் போலவே, கோவை மக்களிடமும் ‘டாடா மிட்கேப் பண்ட்’ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது நடுத்தர நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டமாகும். கடந்த ஜனவரி 31 நிலவரப்படி, இந்த பண்ட் நிர்வகிக்கும் சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.69.88 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 11 சதவீதம் வளர்ச்சியாகும்.
கோவையில் இந்த பண்டின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.ஜனவரி 2026-ல் மட்டும் டாடா மிட்கேப் பண்டில் ரூ.39.17 லட்சத்துக்கு அதிகமான புதிய முதலீடுகள் வந்துள்ளன.
இதுகுறித்து டாடா அசெட் மேனேஜ்மென்ட்டின் பண்ட் மேலாளர் சதீஷ் மிஸ்ரா கூறுகையில்,
“தற்போதைய பொருளாதாரச் சூழல், தங்களை வளர்த்துக் கொள்ள நினைக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. உள்நாட்டில் நடக்கும் மூலதனச் செலவுகள் மற்றும் மக்களின் நுகர்வு அதிகரிப்பு போன்றவற்றால், 2026-ல் நடுத்தர நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும் என நம்புகிறோம்.
எதிர்காலத்தில் மிகப் பெரிய நிறுவனங்களாக உருவெடுக்கப் போகும் இந்த நிறுவனங்களில், இப்போதே முதலீடு செய்ய மிட்கேப் திட்டங்கள் உதவுகின்றன. நீண்ட கால அடிப்படையில் தங்கள் முதலீடு வளர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பண்டுகள் மிகவும் ஏற்றவை,” என்றார்.