January 29, 2026
தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியின் 39 வது ஆண்டு விழா (Mahotsav -2026) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பல்கலை மானிய குழு – மாளதியா மிஷன் ஆசிரியர் பயிற்சி பள்ளி இயக்குனர் சுரேஷ் பாபு கலந்து கொண்டு கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.
விழாவில் அவர் பேசுகையில்,
இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் தூண்கள்.ஆசிரியர்கள் பெற்றோர்களை விட மேலானவர்கள். மாணவர்களுக்கு தலைமை பண்பு ஆசியர்களிடம் இருந்து தான் வருகிறது. மாணவர்கள் என்னவாக ஆக விரும்புகிறார்களோ அதற்கு அனுமதிக்க வேண்டும்.பெற்றோர்கள் இது போன்று தான் எதிர்காலத்தில் ஆக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக இயக்குனர் மோகன் சந்தர்,செயலாளர் உமா மோகன் சந்தர்,பள்ளி முதல்வர் பேபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்சிகள் நடைபெற்றது.நிகழ்வில் நேஷனல் மாடல் கல்வி குழும பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.