• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பவர், ஸ்டைல், மரபு- புதிதாய் வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ், நவ- 06 முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி ஆரம்பம்.

October 17, 2025 தண்டோரா குழு

ஸ்கோடா ஆட்டோ இந்தியா இந்தியாவில் தனது 25 ஆண்டு பயணத்தை கொண்டாடுகிறது. இது உண்மையான வரலாற்றுச் சின்னமான, புதிய ஆக்டேவியா ஆர்எஸ் -இன் மீள்வருகையை குறிக்கிறது.

முழுவதும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கும் ஆக்டேவியா ஆர்எஸ்,சிறந்த ஓட்டும் அனுபவம்,துணிச்சலான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான ஆர்எஸ் பாணியை வெளிப்படுத்துகிறது.இந்தியாவில் ரசிகர்களுக்காக ஒரு தனிப்பட்ட அடையாளமாக திரும்ப வருகிறது.

வெளியீட்டு விழாவில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் டைரக்டர் ஆஷிஷ் குப்தா கூறுகையில்,

“ஆக்டேவியா ஆர்எஸ் -க்கு பெற்ற ரெஸ்பான்ஸ் அற்புதமாக உள்ளது.. இந்த ஐகானிக் மாடல் இந்திய ஓட்டுனர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி, உலகளாவிய ஆக்டேவியா ஆர்எஸ்-ன் புகழ்பெற்ற அந்தஸ்தை உறுதிப்படுத்துகிறது. ஸ்கோடா ஆட்டோ இந்தியாவில் 25 அற்புதமான ஆண்டுகளை கொண்டாடும் போது, உலக தரத்திற்குரிய கார்கள் வழங்கும் எங்கள் உறுதி முன்பு போலவே வலுவாக இருக்கிறது.

ஆர்எஸ் பேட்ஜ் வெறும் செயல்திறனை மட்டுமல்ல, அதற்கு மேலும் ஒரு அடையாளத்தை காட்டுகிறது. இது எங்கள் வாடிக்கையாளர்கள் ஸ்கோடா பிராண்டுடன் கொண்ட உணர்ச்சி பிணைப்பு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. ஸ்கோடா குடும்பத்தில் புதிய தலைமுறை ரசிகர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்த சந்தையில் எங்கள் பிராண்டின் வலுவான மரபையும் ரசிகர்களின் ஆர்வத்தையும் தொடர்ந்தும் கட்டமைக்கிறோம்.ஆக்டேவியா ஆர்எஸ் இன் மையத்தில் 2.0 டிஎஸ்ஐ டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் உள்ளது. 7- ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைந்த இந்த கார் 0–100 கிலோமீட்டர்/எச் வேகத்தை வெறும் 6.4 நொடிகளில் அடைகிறது; மின்னணு முறையில் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ. அதன் மேம்பட்ட சேசிஸ் அமைப்பு, புரோக்ரெசிவ் ஸ்டியரிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் நுட்பமான ஹேன்ட்லிங் மற்றும் சிறந்த ஓட்டும் அனுபவத்தையும் வழங்குகின்றன.புதிய ஆக்டேவியா ஆர்எஸ், ஸ்கோடா-வின் வலிமையான வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது;

முழு எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், டைனமிக் எல்இடி டெயில் லேம்புகள் மற்றும் பிளாக் ஸ்டைலிங் எலிமெண்ட்கள் இதனை மேலும் கவர்ச்சிகரமாகக் காட்டுகின்றன. ஆக்டேவியா ஆர்எஸ் வடிவத்தை ஐந்து பிரகாசமான நிறங்கள் மேலும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன:

மாம்பா கிரீன், கேண்டி ஒயிட், ரேஸ் புளூ, மேஜிக் பிளாக் மற்றும் வெல்வெட் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.ஒவ்வொரு ஸ்கோடா காரையும் போல், ஆக்டேவியா ஆர்எஸ்,-க்கும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா வழங்கும் தொழில்துறையிலேயே சிறந்த உரிமையாளர் பயன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 4 ஆண்டு / 1,00,000 கிலோமீட்டர் வாரண்டி மற்றும் 4 ஆண்டு இலவச ரோட்-சைட் அசிஸ்டென்ஸ் அடங்கும். புதிதாய் வடிவமைக்கப்பட்ட ஆக்டேவியா ஆர்எஸ் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.49,99,000 ஆகும்.

மேலும் படிக்க