• Download mobile app
24 Aug 2025, SundayEdition - 3483
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆ குறுமைய விளையாட்டு போட்டி;ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றிய ஸ்டேன்ஸ் (Stanes) பள்ளி

August 23, 2025 தண்டோரா குழு

கோவையில் மண்டல அளவிலான ஆ குறுமைய விளையாட்டு போட்டிகளை கோவை பந்தயசாலை சி.எஸ்.ஐ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது.

கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்ற இதில்,கோவை நகர பகுதிக்கு உட்பட்ட சுமார் 44 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்களாக நடைபெற்ற இதில்,14,17,19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் கைப்பந்து,கால்பந்து, கூடைப்பந்து,டேபிள் டென்னிஸ்,போன்ற விளையாட்டு போட்டிகளும்,ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்,குண்டு எறிதல், உள்ளிட்ட தடகள போட்டிகளும் நடைபெற்றன.

விளையாட்டுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆர்வத்துடன் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கும் விழா நேரு ஸ்டேடிய அரங்கில் நடைபெற்றது.

விழாவில் சி்.எஸ்.ஐ மெட்ரிக் பள்ளி முதல்வர் குளோரி லதா டேவிட் அனைவரையும் வரவேற்று பேசினார்.இதில் தலைமை விருந்தினராக தென்னிந்திய திருச்சபைகளின் கோவை மண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பேராயர் திமோத்தி ரவீந்தர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களையும் வாழ்த்துவதாகவும், விளையாட்டு துறையில் மாணவர்களுக்கு ஊக்கமளித்து வரும் தமிழக அரசு மற்றும் முதல்வர்,விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தார்.

மண்டல அளவிலான ஆ குறு மைய விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் மற்றும் மாணவியர் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய பள்ளி கைப்பற்றியது.
இந்நிகழ்ச்சியில் பேராயரம்மா ஆனி ரவீந்தர் மற்றும் ஆயர் பாபி ஆல்பிரெட் ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க