• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிறந்த ஆறே நாள் பெண் குழந்தை மர்ம சாவு

January 28, 2017 தண்டோரா குழு

ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த ஆறே நாளில் ஒரு பெண் குழந்தை திடீரென்று இறந்துவிட்டது. ஆனால், அச்சம்பவம் பெண் சிசு கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது.

இது குறித்து காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை (ஜனவரி 28) கூறியதாவது:

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நலகொண்டா மாவட்டத்தில், பிறந்த ஆறே நாளான பெண் குழந்தை இறந்துவிட்டது. ஆனால், அது பெண் சிசுக் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

நலகொண்டா மாவட்டம் சந்தம்பேட் மண்டலில் வசிக்கும் கூலி தொழிலாளர்கள் மாதவத் சாரதா மற்றும் மங்கத்தா தமபதிக்கு சமீபத்தில் சுமார் 3 கிலோ எடையில் பெண் குழந்தை பிறந்தது. அவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நல்ல ஆரோக்கியத்தோடு இருந்த குழந்தைக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அருகில் உள்ள தேவரகொண்டா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அக்குழந்தைக்கு வைட்டமின் மற்றும் க்ளுகோஸ் கொடுத்து சிகிச்சை அளித்தனர். வீடு திரும்பிய குழந்தை ஒரு மணி நேரத்தில் இறந்துவிட்டது.

குழந்தையின் பெற்றோரும் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இது குறித்து யாரிடமும் சொல்லாமல் குழந்தையின் உடலை கிராமத்துக்கு வெளியே புதைத்து விட்டனர். இச்செய்தியை அறிந்த கிராமத்து மக்கள் உடனே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து வருகிறோம். இறந்த குழந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களையும் விசாரித்து வருகிறோம்” என்றார்.

காவல்துறை அதிகாரி கூறுகையில், “இக்குழந்தை உடல் நலக் குறைவால் இறந்துவிட்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

மேலும் படிக்க