• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் ‘பிராண்ட் சூப்பர் ஸ்டாராக’ நடிகர் ரன்வீர் சிங் நியமனம்

February 23, 2025 தண்டோரா குழு

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் ‘பிராண்ட் சூப்பர் ஸ்டாராக’ பாலிவுட்டின் பவர்ஹவுஸ் நடிகரான ரன்வீர் சிங்கை நியமனம் செய்து அறிவித்துள்ளது.

இந்த கூட்டணியின் பலனாக ஸ்கோடாவின் சிக்நேச்சர் ஸ்டைலுடன், மக்களை முன்னிறுத்தி நடத்தப்படும் விளம்பரங்களில் இனி ஸ்கோடாவின் ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக ரன்வீர் சிங் இடம்பெறுவார்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனரான பீட்டர் ஜனேபா இந்த கூட்டணி குறித்து பேசுகையில்,

“கைலாக் கார் அறிமுகம் செய்யப்பட்ட போது, ‘பிக்சர் அபி பாகி ஹை’ என்று நான் உறுதியளித்தேன்.இந்தியாவில் ஸ்கோடாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த வேளையில், உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தற்கு அப்பால், ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுடனான எங்களது ஈடுபாடு உட்பட எங்கள் வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மறுசீரமைப்பதைச் சுற்றியே நாங்கள் செயல்படுகிறோம்.

உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில், கார்கள் மற்றும் திரைப்படங்கள் ஈடிணையற்ற உணர்வுகளை உருவாக்குவதோடு, மக்களையும் ஒன்றிணைக்கின்றன.எனவே இந்திய வரலாற்றில் முதன்முறையாக, ரன்வீர் சிங் அவர்களை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் ‘பிராண்ட் சூப்பர்ஸ்டார்’ என்று அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். திரையிலும், நிஜத்திலும் திறமை மற்றும் ஆற்றலின் பவர்ஹவுஸாக உள்ள ரன்வீரின் ஆளுமை – ஸ்கோடாவின் ஆவலையும் நெறிமுறைகளையும் ஒத்துள்ளது.

உலகளவில் 130-வது ஆண்டை கொண்டாடும் நேரத்தில், இந்த அறிவிப்பினை நாங்கள் வெளியிடுகிறோம். இந்த கூட்டணியானது எங்களது – தயாரிப்புகள், நெட்வொர்க் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் நிறைய நற்பலன்களைக் கொண்டு வரப்போகிறது; ஏனெனில் ஐரோப்பாவிற்கு வெளியே ஸ்கோடாவின் மிக முக்கியமான சந்தையாக இங்கு எங்கள் இடத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம்”, என்று கூறினார். ஸ்கோடா பிராண்டின் சூப்பர் ஸ்டார் ரன்பீர் சிங் இடம்பெறும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் பிளாக்பஸ்டர் படைப்பு விரைவில் வெளியாகவுள்ளது;

இதில் ரன்வீர் சிங், கைலாக் காருடன் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மார்ச் மாத இறுதியில் ஸ்கோடா பிராண்டை மையமாகக் கொண்ட ஒரு படத்தை உருவாக்கும் திட்டமும் உள்ளது; இதன் மூலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ரன்வீர் சிங் மற்றும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத்தினரை சந்திக்கும் வாய்ப்பினைப் பெறலாம்.

மேலும் படிக்க