• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீட்டின் பூட்டினை உடைத்து தங்க நகைகள் திருடிய நபரை கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்

December 30, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசிக்கும் ரெக்ஸ் மரியா ஹெப்பர் (30) என்பவர் கடந்த 26.12.2024 அன்று அவரது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டதாகவும், வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் ரஞ்சித் என்பவர் போன் மூலம் ரெக்ஸ் மரியா ஹெப்பரிடம் வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் கூறியுள்ளார்.

உடனே ரெக்ஸ் மரியா ஹெப்பர் புறப்பட்ட நேரில் வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவிலிருந்த சுமார் 22 சவரன் தங்க நகையை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றது தெரியவந்து,மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்படி திருட்டு வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புலன்விசாரணை செய்து வந்த நிலையில், இன்று (30.12.2024) தனிப்படையினர் கோவை சுந்தராபுரம் பகுதியில் சேர்ந்த அப்துல் மஜீத் மகன் முபாரக் அலி (31) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வீட்டின் பூட்டினை உடைத்து திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதன் பேரில், மேற்படி முபாரக் அலியை கைது செய்து,அவரிடமிருந்து மேற்படி வழக்கின் செத்துக்களான சுமார் 22 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேலும் விசாரணையில் மேற்படி நபர் கிணத்துக்கடவு காவல் நிலைய பகுதியில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க