• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு விவசாயிகளை சந்தித்த அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள்

December 23, 2024 தண்டோரா குழு

அமிர்தா வேளாண் கல்லூரியில் பயிலும் நான்காம் வருட மாணவர்கள்,அவர்களின் ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி திட்டத்தின் கீழ் ஆண்டிபாளையம் ஊராட்சியில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இன்று தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் விவசாயப்பெருமக்களைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடுகள்,மற்றும் அவர்களது அன்றாட நடைமுறை பற்றியும் கேட்டறிந்தனர் மேலும் பயிர் செய்யும் முறை, பயிர் பாதுகாப்பு, மண்வளம் மேம்படுத்துகல், மற்றும் பயிர் அறுவடை வரை விவசாயிகள் மாணவர்களுக்கு விளக்கினர்.

இதில் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது கருத்துகளை பறிமாரிக் கொண்டதோடு விவசாயிகளின் சந்தேகத்தையும் மாணவர்கள் விளக்கினர். மேலும் இந்த நிகழ்வு,கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஸ்மணாலில், திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராஜ், மற்றும் பேராசிரியர்கள் சத்ய பிரயா, மார்த்தாண்டன்,அரவிந், வனிதா ஆகியோரின் வழிகாட்டுதல் படி நடைபெற்றது.

நிகழ்வின் ஒருபகுதியாக மாணவர்கள் விவசாயிகளுக்கு இனிப்புகள் வழங்கியும், மரக்கன்றுகள் கொடுத்தும் விவசாயிகளுக்கு நன்றி பாராட்டினர்.இதில் மாணவர்கள் விவசாயத்தை உயிராக கருதி இன்றும் பழைமை மாறாமல் மண் வாசத்துடன் வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு வாழ்த்துகள் கூறி நிகழ்வை நிறைவு செய்தனர்.

மேலும் படிக்க