• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்

December 22, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் ஜீவன்ராஜ் (21) என்பவர் கடந்த மாதம் செல்வம் ஸ்டோர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது,அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று ஜுவன்ராஜை வழிமறித்து அவரிடமிருந்த 2 ¼ சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 500/- பணத்தை பறித்துக் கொண்டு ஆம்னி காரில் ஏறி சென்றுள்ளார்கள்.

மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மேற்படி வழிப்பறி வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று (21.12.2024) சூலூர் பகுதியை சேர்ந்த அன்பு மகன் முருகன் (40),தாமோதரன் மகன் பிரபாகரன் (23), ராஜா மகன் ரபிகர் (20),தர்மலிங்கம் மகன் சரத்குமார் (27) மற்றும் மூக்கையன் மகன் முத்துமாரி (43)ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் மேற்படி நபர்களை கைது செய்து மேற்படி வழக்கின் சொத்தான 2¼ சவரன் தங்க நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய ஆம்னி கார்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க