• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராயல் கேர் செவிலியர் கல்லூரி, நீலாம்பூர் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

November 24, 2024 தண்டோரா குழு

ராயல் கேர் செவிலியர் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கான ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சமீபத்தில் நிர்வாக அறங்காவலர் மற்றும் தலைவர் டாக்டர் K.மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

முனைவர் பேராசிரியர் G.திலகவதி ராய், கல்லூரி முதல்வர்,வரவேற்புரை வழங்கினார். கல்லூரி தாளாளர் டாக்டர்.கீர்த்தனா புதிய மாணவர்களுக்கு ராயல் கேர் நர்சிங் கல்லூரி ராகிங் இல்லாத வளாகம் என்று உறுதியளித்தார். சிறப்பு விருந்தினராக வருகை தந்த சூலூர் காவல்நிலைய காவல் துணைக்கண்காணிப்பாளர் மனோஜ், இந்தியாவில் ராகிங் ஆல் ஏற்படும் சட்டரீதியான விளைவுகளைப் பற்றி விளக்கினார்.

ஆபத்துக்காலங்களில் காவல்துறையினருடன் தொடர்புகொள்வதில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.சுபிக்க்ஷா, மருத்துவ உளவியலாளர் ராகிங் உளவியல் தாக்கங்கள் குறித்து உரையாற்றினார். ராகிங் இல்லாத சூழலை உருவாக்குவோம் என்றும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேராசிரியர் M ஸ்மிதா அவர்கள் நன்றி உரை வழங்கினார். இறுதியாக தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

மேலும் படிக்க