• Download mobile app
17 Feb 2026, TuesdayEdition - 3660
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அன்னூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்

November 23, 2024 தண்டோரா குழு

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜீத்குமார் என்பவர் கடந்த 22.11.2024 கோவை மாணிக்கம் பாளையம் அருகே உள்ள கம்பெனியில் அன்று வேலை கேட்டபோது அவர்கள் மறுதினம் காலை வரும்படி சொன்னதன் பேரில் அஜீத்குமார் அருகில் உள்ள டீக்கடையில் காத்திருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் அஜீத்குமாரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த சுமார் 6½ சவரன் தங்க நகையை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழிப்பறி வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,உத்திரவிட்டதன் பேரில் ,தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று (23.11.2024) மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மலைச்சாமி மகன் ராஜேஷ் (24), முருகன் மகன் திவாகர் (19), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைச்சாமி மகன் தமிழ்ச்செல்வன் (20) மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மலைச்சாமி மகன் முகேஷ்வரன் (19) ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் மேற்படி நபர்களை கைது செய்தும், மேற்படி வழக்கின் சொத்துக்களான சுமார் 6½ சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க