• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி

July 28, 2024 தண்டோரா குழு

கோவையில் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது.

கோவையில் SIP அகாடமி இந்தியா, சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 2024 நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 1000 எஸ்ஐபி அபாகஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் திருமதி உஷாராணி கலந்து கொண்டார்.இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில், அபாகஸ், பெருக்கல் மற்றும் காட்சி எண்கணிதத் தொகைகளை உள்ளடக்கிய 300 கணிதப் தீர்வுகளை குழந்தைகள் 11 நிமிடங்களில் தீர்த்தனர்.

இது நிகழ்வின் 7வது பதிப்பாகும். முந்தைய ஆண்டு தேசிய நிகழ்வுகள் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் நடைபெற்ற போட்டியின் அளவு மற்றும் வடிவத்திற்காக 4 LIMCA சாதனை புத்தகங்களை எட்டியுள்ளன. SIP அபாகஸ் இந்தியா ஊழியர்களுடன் 1000 மாணவர்களின் பெற்றோர்கள் இந்த மாபெரும் போட்டியைக் காண வந்திருந்தனர். விழாவில் மொத்தம் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க