• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி

July 10, 2024 தண்டோரா குழு

கோவை க.க சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு,கல்லூரி முதல்வர் கல்பனா அனைவரையும் வரவேற்றார்.கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும்,நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து,மாணவர்களிடையே அவர் பேசுகையில்,நம்பிக்கை, மரியாதை, புரிதல் மற்றும் கல்வி மூலம் மாணவர்களின் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தி பேசினார்.மேலும் கல்வி ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் மாணவர்கள் தங்கள் அணுகுமுறையை பலப்படுத்தி நல்ல நடத்தைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பங்கஜ் குமார் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்தார்.தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாணவர் பேரவை உறுப்பினர்களை சிறப்பு விருந்தினர் அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியாக, முதலாம் ஆண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.ஆங்கிலத் துறை தலைவர் மஞ்சு நன்றி கூறினார்.இதில் கல்லூரியின் பேராசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க