• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களுக்கும் நாஸ்காம் அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

March 25, 2024 தண்டோரா குழு

மின்னணு தொழில்நுட்பங்களில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் – மேம்பாட்டு சான்றிதழ் பயிற்சிகளை பெற பயனுள்ளதாக இந்த நாஸ்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாணவர்களுக்கு வழி வகுக்கும் என அரசு தொடர்புகள் துறையினுடைய தலைவர் உதயசங்கர் தெரிவித்தார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கிருஷ்ணா கல்வி நிறுவனங்களுக்கும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம் அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அனைத்து மாணவர்களும் – மிகச் சிறந்த மின்னணு தொழில்நுட்பங்களில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், நாஸ்காம் அளிக்கும் திறன் மேம்பாட்டு சான்றிதழ் பயிற்சிகளை பெறவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பாக எஸ்.மலர்விழி மற்றும் நாஸ்டீம் அமைப்பின் கல்வி மற்றும் அரசு தொடர்புகள் துறையினுடைய தலைவர் உதயசங்கர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.இந்த புரிந்துணர்வு நிகழ்வில் 500″க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்த விழாவானது ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் கே ஆதித்யா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் முனைவர் கே.சுந்தாராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் படிக்க