• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி எஸ் ஜி மருத்துவமனையில் நல வாழ்வு குறித்து கருத்தரங்கு

March 2, 2024 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியும்,பி.எஸ்.ஜி மருத்துவமனையும் இணைந்து எம்.எஸ். சி ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் எனும் புதிய பாடப்பிரிவை நடத்தி வருகிறது.

இந்தத் துறை மாணவர்களுக்கு ஹெல்த் 360 எனும் தலைப்பில் நல வாழ்வு குறித்த கருத்துரங்கு கோவை பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

கருத்தரங்கு குறித்து கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் கூறுகையில்,

தற்போது மருத்துவமனைகளுக்கும், கிளினிக்,நர்சிங் ஹோம் களில் ஹெல்த் அட்மினிஸ்ட்ரேட்டர் தேவை மிகவும் உள்ளது. ஒரு மருத்துவமனையை நடத்துவதற்கான திறமைகளை எம்.எஸ்.சி ஹெல்த் அட்மினிஸ்ட்ரேஷன் எனும் பாடப்பிரிவு வழங்குகிறது.இந்த பாடப் பிரிவில் 30 மாணவர்கள் படித்து பட்டம் பெற்ற உள்ளனர்.இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அதனை நிர்வாகம் செய்யும் திறமையுடன் வெளிவர உள்ளனர்.இவர்களுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமல்லாமல்,மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவங்களுடன் வருகின்றனர்.

மருத்துவமனையை சரியாக நடைபெற டாக்டர்கள், நர்சுகள், மட்டுமல்லாமல் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் பங்கும் முக்கியமானது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஹெல்த் 360 எனும் பெயரில் கருத்தரங்கம் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பிருந்தா, அங்கு ராஜ், அமராவதி உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர்.

மேலும் படிக்க