• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜயதசமியை முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி

October 24, 2023 தண்டோரா குழு

விஜயதசமியை முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்று வரும் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து எழுத்தறிவித்து வருகின்றனர்.

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி அனைத்து ஐயப்பன் கோவில்களிலும் நடைபெறும்.இந்நிகழ்வில் ஐயப்பனை வழிபட்டு குழந்தைகளை அரிசி தட்டில் எழுத்துக்களை எழுத வைத்தால் கல்வியறிவு மேம்படும் என்பது ஐதீகம். அதன் படி பெரும்பாலான ஐயப்பன் கோவில்களில் இந்த எழுத்தறிவுத்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் அதிகாலை முதல் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து ஐயப்பனை வழிபட்டு அரிசி தட்டில் எழுத்துக்களை எழுத வைக்கின்றனர்.

விஜயதசமியை முன்னிட்டு அக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து வருகை புரிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க