• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சில மாதங்களுக்கு முன்பு திருட்டுப்போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

August 22, 2023 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆணையர் பாலகிருஷ்ணன் தொலைந்து போன செல்போன்களை அதன் உரிமையாளரிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.கடந்த ஒரு வருட காலமாக கோவை மாநகர காவல்துறை சார்பாக மூன்று முறை தொலைந்து போன செல்போன்கள் மற்றும் பறித்துச் சென்ற செல்போன்கள் கண்டுபிடித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் ஒப்படைக்கபட்டு உள்ளது.மேலும் சில மாதங்களாக முன்பு திருட்டுப் போன செல்போன்கள் காவல்துறையில் வழக்கு பதிவு செய்து 250 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொலைந்து போன செல்போன்கள் தொழில்நுட்பம் மூலமாக இந்த செல்போன்கள் எங்கு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டு செல்போன் வைத்திருந்தவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கேரளா பெங்களூர் மாநிலங்களிலிருந்தும் இந்த செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது அவிநாசி சாலையில் நான்கு சக்கர வாகனத்திற்கு பின்புறம் வந்து மர்ம நபர்கள் உங்களது வண்டி சக்கரம் ஆடுகிறது என வழிப்பறி குறித்த கேள்விக்கு புகார் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க