• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மணிப்பூரில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

August 7, 2023 தண்டோரா குழு

மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதை கண்டித்து கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இருபதுக்கும் மேற்பட்ட பேராயர்கள் கலந்து கொண்டனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள், வீடுகள், பள்ளிகள், அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டதை கண்டித்து ஆங்கிலிக்கன் பேராயர் மன்றம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை சுங்கம் பைபாஸ் சாலை ஆல்வின் நகர் பகுதியில் உள்ள புதுவாழ்வு மாநகர பேராலயம் முன்பாக நடைபெற்ற ,இதில் ஒடிசா,ஹைதரபாத்,கேரளா,குஜராத்,நாக்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ சபையை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பேராயர்கள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான ஆயர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதை கண்டித்தும்,மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும்,200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.இதில் பேராயர்கள் டாக்டர் ரீன் ஹார்டு சந்திரசேகர்,ரவி ஜேசுபால்,ஸ்டீபன் வட்டப்பாறா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க