• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமுகையில் மூதாட்டியை வீடு புகுந்து தாக்கி 5 சவரன் நகை பறிப்பு -3 பேர் கைது

August 3, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் சின்னம்மாள் (67). கணவர் இறந்துவிட்டார்.இவர் அதே பகுதியில் தனது வீட்டின் முன்புறம் உள்ள ஒரு கடையில் இட்லி, தோசை மாவு விற்று வருகிறார். சின்னம்மாலுக்கு தட்சிணாமூர்த்தி என்கிற ஒரு மகன் உள்ளார். அவர் சென்னையில் வசித்து வருகிறார். மகனின் மனைவி வேலுமயில், தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.

சின்னம்மாள் கடந்த மாதம் 31ம் தேதி வேலை முடித்து வீட்டிற்குள் செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரைத் தாக்கி பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி பறித்துச் சென்றுள்ளனர்.

இது சம்மந்தமாக சின்னம்மாள் சிறுமுகை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமுகை போலீசார் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் சின்னம்மாளை தாக்கி பணம் மற்றும் நகையை பறித்து சென்றது சிறுமுகை பகுதியை சேர்ந்த சர்மா (21), மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது அம்ரித் (21) மற்றும் சிறுமுகை பகுதியை சேர்ந்த இளஞ்சிறார் ஒருவரும் இக்குற்றத்தில் ஈடுபட்டது
தெரியவந்தது.

இந்நிலையில் தனிப்படை போலீசார் துடியலூர் அருகே நேற்று முன் தினம் நடைபெற்ற வாகன சோதனையின் போது இந்த மூன்று நபர்களையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 5 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து சர்மா (21) மற்றும் முகமது அம்ரித் (21)ஆகிய 2 நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இளஞ்சிறாரை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க