• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நொய்யல் ஆற்றுப்படுகையில் மணல் திருட்டில் ஈடுப்பட்ட மூன்று பேர் கைது – ஒரு வாகனம் பறிமுதல்

August 3, 2023 தண்டோரா குழு

கோவை ஆலாந்துறை பகுதியில் நொய்யல் ஆற்று படுகையில் அரசு அனுமதி இன்றி மணல் எடுப்பதாக ஆலாந்துறை கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது அங்கு மூன்று பேர் மணல் எடுத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களின் பெயர் கதிர்வேல்,ராபூல் உசேன், நபி உசேன் என்பதும் அனுமதியின்றி மணல் எடுத்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து மூவர் மீதும் ஆலாந்துறை காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் சுகுமார் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.மேலும் இந்த மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய ஈச்சர் வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்படுள்ளது.

மேலும் படிக்க