• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கழுத்தில் கத்தி..உயிர் பயத்தில் வாலிபர் கொடுத்த பணம் வழிப்பறியில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார்

July 15, 2023 தண்டோரா குழு

புதுக்கோட்டையை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் (21). இவர் கோவையில் பெட்டி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு சரவணம்பட்டி அருகே உள்ள காந்திமாநகர் பகுதியில் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது கீர்த்தி ராஜனை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து வாலிபர் ஒருவர் பணம் தருமாறு மிரட்டியுள்ளார். உயிர் பயத்தில் கீர்த்தி ராஜன் தன்னிடம் உள்ள ரூ.1000 தந்துள்ளார்.

பின்னர் நடந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறியில் ஈடுபட்டது பீளமேடு பகுதியை சேர்ந்த மதுசூதன் (29) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க