• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேருந்து ஏற முயன்றவரிடம் செல்போன் பறிப்பு வழக்கில் தனிப்படை போலீசார் திருடனை பிடித்ததில் 11 செல்போன்கள் மீட்பு

July 15, 2023 தண்டோரா குழு

கோவை அன்னூர் பகுதியில் கவின் பிரசாத் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அன்னூர் பேருந்து நிலையத்தில் பேருந்து ஏற முற்பட்டபோது அவருடைய செல்போனை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றுள்ளார். இது சம்மந்தமாக அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு தலை மறைவான குற்றவாளியை தேடி வந்த நிலையில், மேற்படி திருட்டு வழக்கில் தொடர்புடைய
முருகேசன் (37) கைது செய்து அவரிடமிருந்து ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 11 செல்போன்களை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேலும் படிக்க