• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பத்மஸ்ரீ’ விருதிற்கு 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்

July 8, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய அளவில் வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதானது பொதுமக்களில் சிறந்த நபர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகும். இந்த விருதிற்கு பரிந்துரைக்கப்படும் நபர்கள் அந்தந்தத் துறைகளில் தேசிய விருது அல்லது மாநில அளவில் விருதுகள் பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி கோவை மாவட்டத்தில் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்த மற்றும் விதிவிலக்கான சாதனைகள் புரிந்துள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களோடு கோவை மற்றும் பொள்ளாச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் தனி வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க