• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி குழந்தைகளின் திறனை வளர்க்கும் விதமாக மாநில அளவிலான ஓவிய போட்டி !

July 2, 2023 தண்டோரா குழு

பள்ளி குழந்தைகளின் கலை மற்றும் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் விதமாக கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவிய போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

குழந்தைகளின் கலை மற்றும் ஆக்கப்பூர்வமான திறனை வளர்க்கும் விதமாக கோவையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக கோவை பீளமேடு பகுதியில் பள்ளிக் குழந்தைகளின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக குளோபல் ஆர்ட் சார்பில் மாநில அளவிலான ஓவிய போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கோவை, மதுரை,திருச்சி, என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரையிலான மாணவ,மாணவிகள் இதில் கலந்து கொண்டு தங்களது படைப்பாற்றல் திறனை வண்ண ஓவியங்களாக படைத்து அசத்தினர்.தொடர்ந்து இதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கும் சிறந்த ஓவியங்களுக்கும் பரிசுகள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேலும் படிக்க