• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு பணிகள் நடக்கும் இடங்களில் ஒப்பந்ததாரரின் விவரம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் -விவசாயிகள் வலியுறுத்தல்

June 30, 2023 தண்டோரா குழு

கோவை அரசு பணிகள் நடக்கும் இடங்களில் ஒப்பந்ததாரரின் விவரத்தை பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனுவுடன் வந்திருந்தனர். கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து, கிராமப்புற ஊராட்சி மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ மூலம் பல்வேறு பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.இதுதவிர பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பல்வேறு துறைகளும் நிதி ஒதுக்கி வருகின்றன. எனவே மேற்கண்ட பணிகள் நடக்கும் பகுதிகளில் ஒப்பந்ததாரர் பெயர், வேலையின் விவரம், நிதி ஓதுக்கீடு ஆகியவை பற்றி பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பர பலகை வைக்க வேண்டும். தரமான முறையில் பணிகள் நடக்க வேண்டும்.

ஒப்பந்ததாரர்கள் அதிக அளவில் கமிஷன் கொடுப்பதால் பணிகளை முழுமையாக செய்வதில் சிரமம் உள்ளது. எனவே பணிகள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். போக்குவரத்து சாலை அமைக்கும்போது இருபுறமும் மழைநீர், கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்.அரசாங்க திட்டங்களின்போது தரமான கட்டுமான பொருட்கள் பயன்படுத்துவதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.இதுகுறித்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் எழுத்துபூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க