• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

June 19, 2023 தண்டோரா குழு

ஜெம் மருத்துவமனை மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இன்று ஒரு நாள் முழு உடல் பரிசோதனை முகாம் நடத்தியது.இந்த முகாம் ஜெம் மருத்துவமனையில். நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த மருத்துவ முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு ஸ்கேன், எக்ஸ்-ரே, ECG இருதய பரிசோதனை கர்ப்பப்பை கோளாறுகள், கர்ப்பப்பை புற்றுநோய்கள், இரத்தசிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் சர்க்கரை அளவு, மஞ்சள் காமாலை, உப்பு சத்து அளவு, சிறுநீர் பரிசோதனை மற்றும் கல்லீரல், கணையம், ஜீரண மண்டல நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டது.

மேலும் தொடர்ந்து சுமார் 750 நபர்களுக்கு வரும் நாட்களில் முழு உடல் பரிசோதனை செய்யப்படுமென மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமின் துவக்க நிகழ்ச்சியில் ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு அவர்கள், துணைத்தலைவர் டாக்டர். பிரவீன் ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் சிவக்குமார், சுகாதார குழு மாரி செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க