• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குனியமுத்தூரில் தனியார் ஒர்க் ஷாப்பில் 6 கார்களில் தீ பற்றியதால் பரபரப்பு

June 15, 2023 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூரை அடுத்த இடையர்பாளையம் சாலையில், தனியார் ஒர்க் ஷாப் செயல்பட்டு வருகிறது.இதனை டிசோசோ என்பவர் நடத்தி வருகிறார். இங்கு பல்வேறு கார்கள் பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் என்பவரது சொகுசு கார் பழுது நீக்கப்பட்டுள்ளது.

பழுது நீக்கப்பட்ட அந்த காரை அரவிந்த் ஓட்டி பார்த்துவிட்டு மீண்டும் ஒர்க் ஷாப்பில் நிறுத்தி உள்ளார். அப்போது சில நொடிகளில் எதிர்பாராத விதமாக காரில் திடீரென தீப்பற்றி உள்ளது. இதனை அடுத்து அங்கு பணிபுரிபவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள்ளாகவே அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கார்களில் தீ பற்றியுள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படாமல் உயிர்தப்பினர்.

இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கார் தீ பற்றியதன் காரணமாக அதிகளவிலான கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும் படிக்க