• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருதமலை கோயிலில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்டம்- பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர்

June 3, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்டம் வரைவு தொடர்பான ஆய்வுக்கூட்டம் பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் பேசியதாவது:

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் சோமையம்பாளையம் கிராமத்தில் உள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலுக்கு பெருந்திட்டம் வரைபடம் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இத்திட்டம் ரூ.45 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோயில் சாலைகள் மேம்பாடு, தேவையான அடிப்படை வசதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள், கடைகள், காத்திருப்போர் அறை, மரம்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவும், கோயில்களின் சுற்றுப்புறங்களில் சேரும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றவும், சுத்தமான குடிநீர் விநியோகிக்கவும் சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த இந்து சமய அறநிலைங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் துணை கமிஷனர் ஹர்சினி, வருவாய் கோட்டாட்சியர்(வடக்கு) கோவிந்தன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க