• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆறுமுக வேலவர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

June 2, 2023 தண்டோரா குழு

கோவை மணியகாரம்பாளையம் ராக்காச்சி கார்டன் பகுதியில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக வேலவர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கோலகலமாக நடைபெற்றது.

கோவை கணபதி, மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்த கலச விநாயகர் கோவில்,திருமண பாக்கியம்,குழந்தை வரம்,மற்றும் கல்விக்கண் திறப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக அப்பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது.இந்நிலையில்,இக்கோவில் வளாகத்தில் தமிழ் கடவுளாம் ஆறு முக வேலவ பெருமானுக்கு தனி கருவறை அமைக்கப்பட்டு, முருகனுக்கு உகந்த நாளான வைகாசி திங்களன்று திருநெறிய திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருக்குட நீராட்டு பெருவிழாவை முன்னிட்டு 108 தீர்த்த குடங்கள் ஊர்வலம், கவுமார மடாலயம் சிரவை ஆதீன அருட்பணி மன்றத்தினர் முன்னின்று நடத்திய இரண்டு கால வேள்வி வழிபாடு கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக,சிறப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டு,திருக்குடங்கள் கோயிலை வலம் வந்து விமான கலசத்திற்கு எடுத்து சென்று புனித நீர் ஊற்றப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னால் மேயர் செ.ம.வேலுசாமி, முன்னால் எம்.பி.நாகராஜன்,தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் கோவை கணபதி மணியகாரம்பாளையம், ராக்காட்சி கார்டன்,பிருந்தாவன் நகர்,ரங்கா நகர்,எல்.கே.ஜி.நகர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க