• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத்தினர் கோவை மாநகர அலுவலகத்தில் மனு

May 31, 2023 தண்டோரா குழு

கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் உபைதூர் ரகுமான், செயலாளர் மதியழகன், பொருளாளர் அபுதாகிர் ஆகியோர் இன்று கோவை மாநகர ஆணையாளரை சந்தித்த மனு அளித்தனர்.

இது குறித்து கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் உபைதூர் ரகுமான் கூறியதாவது,

கோவை சாக்கு வியாபாரிகள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சங்கம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. சங்க உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் மூலம் நலிந்த உறுப்பினர்களுக்கு வீட்டுமனைகளை சங்கத்தின் மூலமாக குறைந்த விலைக்கு கொடுப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகும்.

ஆனால் முன்னாள் நிர்வாகிகள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்து சங்கத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர் எனவும்.மேலும் அவர்கள் சங்க நிர்வாகிகள் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து காசோலைகள்,கட்டிட சாவி உள்ளிட்டவற்றை எடுத்து சென்று விட்டனர்.

நாங்கள் பலமுறை கேட்டும் திருப்பிப் தர வில்லை எனவே இது குறித்து கோவை மாநகர ஆணையாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மனுதாரர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க