• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புலம்பெயர்ந்தோர்க்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

May 31, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:

தமிழக அரசு கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர்ந்தோருக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க ஏதுவாக “புலம்பெயர்ந்தோர்க்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்” என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா தொற்று பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம்.
கொரோனா பரவலினால் 2020 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழகம் திரும்பியவர்கள்,வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களை அதிகபட்சம் ரூ.5 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், உற்பத்தி சார்ந்த தொழில்களை அதிகபட்சம் ரூ.15 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும் துவங்கலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற குறைந்த பட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு பொது பிரிவினருக்கு 18 முதல் 45 வரையிலும்,இதர பிரிவினருக்கு 18 முதல் 55 வரையிலும் இருக்க வேண்டும்.சொந்த முதலீடாக பொது பிரிவினர் திட்டத் தொகையில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் துவங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் மானியம் வழங்கப்படும்.

இம்மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வங்கியில் வைப்புநிதியாக வைக்கப்பட்டு பின் கடனுக்கு சரிகட்டப்படும். இத்திட்டமானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் மூலம் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தபடுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கோவை – 641001 என்ற முகவரியை நேரடியாகவோ அல்லது 0422-2391678, 2397311 என்ற எண்ணிலோ அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க