• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாசாஜ் பார்லர்கள், சலூன்கள் நடத்த மாநகராட்சி அனுமதி சான்று வேண்டும் – கமிஷனர் தகவல்

May 29, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதியில் முடிதிருத்த நிலையம், அழகு நிலையம், ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர் ஆகிய நிறுவனங்களை நடத்த காவல் துறையினரின் தடையின்மைச் சான்று மற்றும் கோவை மாநகராட்சி மாநகர நல அலுவலரின் தடையின்மைச் சான்று பெறப்பட வேண்டும் என கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சியில் முடிதிருத்த நிலையம், அழகு நிலையம், ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர், நீராவி குளியல் தொட்டியுடன் கூடிய முடிதிருத்தம் தொழில் செய்யும் நிலையங்கள் மாநகராட்சியின் அனுமதியின்று கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் உரிமம் இன்றி நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிம விண்ணப்ப கடிதத்தில் காவல் துறையினரின் தடையின்மைச் சான்று மற்றும் கோவை மாநகராட்சி மாநகர நல அலுவலரின் தடையின்மைச் சான்று பெறப்பட வேண்டும்.

மேற்காணும் நிறுவனங்கள் தங்களுக்கு உரிய நிறுவனத்திற்கான உரிமத் தொகையானது சாதாரன முடிதிருத்தும் நிறுவனங்களுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.200, அதே நிறுவனங்களில் குளிர்சாதன வசதிகள் பொருத்தப்பட்டிருந்தால் ரூ. 1000, அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் பார்லர் மற்றும் நீராவி குளியல் தொட்டியுடன் கூடிய முடிதிருத்தம் போன்ற நிறுவனங்கள் 500 சதுர அடி வரை என்றால் ரூ.5 ஆயிரம், 501 முதல் 1000 சதுர ஆடி வரை ரூ.10 ஆயிரம், 1000 சதுர அடிக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் வருடாந்திர உரிமத் தொகை கட்டணமாக மாநகராட்சியில் செலுத்தி அனுமதிக் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக கோவை மாவட்ட சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க