• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1300 கோடி மெகா மோசடி

May 19, 2023 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் யு.டி.எஸ். என்ற நிதி நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சூலூரை சேர்ந்த ரமேஷ் (30). இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.10 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும். 20 மாதங்களுக்கு பின் முதலீட்டு தொகை திரும்ப அளிக்கப்படும். ரூ.1 லட்சத்தை வைப்பு நிதியாக செலுத்தினால் 1 ஆண்டு முடிவில் ரூ.2 லட்சம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதனை நம்பி அந்த நிறுவனத்தில் 76 ஆயிரம் பேர் முதலீடு செய்தனர். அவர்கள் செலுத்திய முதலீட்டு தொகை மொத்தம் ரூ.1,300 கோடி. ஆனால் இந்த நிறுவனத்தினர் சொன்னபடி வட்டி மற்றும் முதலீடு தொகையை முதலீட்டாளர்களுக்கு திருப்பிக் கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த தனியார் நிதி நிறுவனத்தின் மெகா மோசடி குறித்து விசாரணை நடத்த போலீஸ் துணை சூப்பிரண்டு முருகானந்தம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், லட்சுமி, மகேஸ்வரி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தனிப்படையினர் இந்த நிதி நிறுவனத்தின் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-

31 பேர் மட்டுமே இந்த நிறுவனம் குறித்து புகார் அளித்துள்ளனர். எனவே அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 76 ஆயிரம் பேரின் விபரங்களை சேகரித்து வருகிறோம். அவர்களின் பெயர், முகவரி, முதலீடு செய்து ஏமாந்த தொகை எவ்வளவு? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

இதனிடையே இந்த விசாரணையில் வழிகாட்டுதல் வழங்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் எஸ்.பி. அங்கித் ஜெயின் நேற்று கோவை வந்தார்.

மேலும் படிக்க