• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உண்டு உறைவிட சிறப்பு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது

May 16, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியரின் நேரடி அறிவுரையின்படி கோவை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து உண்டு உறைவிட சிறப்பு கோடை கால பயிற்சி முகாம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நாளை முதல் 26ம் தேதி வரை 10 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு பயில உள்ள அரசு, மாநகராட்சி நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். அது சமயம் களப்பயணம் செல்லவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பானை ஓவியம், மணல் சிற்பம், காகித வேலைப்பாடுகள், மெழுகுச் சிற்பம், களிமண் சிற்பம், போன்ற பல்வேறு வகையான கலைகள் சார்ந்த பயிற்சிகளை அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் கலை ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுமதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க