• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்த கோவை போலீஸார்

May 6, 2023 தண்டோரா குழு

கோவையில் கேரளா மாநில வாளையார் எல்லைப்பகுதிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள கே.ஜி.சாவடி பகுதியில் உயர்ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் நேற்று மாலை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பாலக்காடு ரோடு கவுண்டர் மெஸ் அருகே சோதனை மேற்கொண்ட போது உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைனை வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த அபிநந்த் (21) மற்றும் முகமது பைசல் (19) ஆகியோர் போலீஸாரை கண்டதும் கேரளாவுக்கு தப்பிக்க முயன்றனர். தனிப்படை போலீஸார் அவர்களை எல்லைப்பகுதிக்கு முன்பாகவே மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 16000 மதிப்புள்ள 6 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ”
இந்த இரண்டு இளம் வாலிபர்களும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள். கேரளாவில் இருந்து கோவைக்கு வந்த அவ்வப்போது போதை பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பாலக்காடு அடுகே உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர்,” என்றனர்.

மேலும் படிக்க