• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய அளவிலான தடகள போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர் வெள்ளி பதக்கம்

May 4, 2023 தண்டோரா குழு

உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்ற ஆசிய அளவிலான தடகள போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர் யோகேஸ்வர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ராஜசேகரன்- ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் யோகேஸ்வர்.கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் இவர், அண்மையில் ,உஸ்பெக்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 5 வது இளையோர் ஆசிய அளவிலான தடகள போட்டியில் யோகேஸ்வர் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

சுமார் 40 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில்,3000 மீட்டர் தூரத்தை 8 நிமிடம் 39 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்று ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வென்று சாதனை புரிந்த கோவையை சேர்ந்த முதல் வீர்ரான, யோகேஸ்வர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.இந்திய அளவில் வெள்ளி பதக்கம் வென்று கோவை விமான நிலையம் திரும்பிய யோகேஸ்வருக்கு ஆஸ்ரம் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள்,தடகள வீர்ர்கள்,கோவை மாவட்ட விளையாட்டு துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என நூறுக்கும் மேற்பட்டோர் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய யோகேஸ்வர்,இந்த சாதனை புரிய விரும்பிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக கூறிய அவர்,அடுத்த இலட்சியமாக இளையோர் ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவதே தனது இலட்சியம் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க