• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிவிலியர்ஸை வேகமாக விரட்டும் விராட் கோலி!

January 12, 2017 tamilsamayam.com

சர்வதேச ஒருநாள் ரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு நம்பர்-1 இடத்துக்கு முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது.

சர்வதேச ஒருநாள் அரங்கில் சிறப்பாக செயல்படும் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., இன்று வெளியிட்டது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி, தனது இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். ரோகித் சர்மா 9வது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப்-10ல் இடம் பெறவில்லை. ஷிகர் தவான் 12வது இடமும், தோனி 14வது இடமும் பிடித்தனர்.

இப்பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்தும் பட்சத்தில் கோலி நம்பர்-1 இடத்துக்கு முன்னேறலாம். இதேபோல ஆஸ்திரேலியாவின் வார்னர் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவருக்கும் கோலிக்கும் சிறு அளவுமட்டுமே வித்தியாசம் உள்ள நிலையில், இவரும் நம்பர்-1 இடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

இதேபோல சிறந்த பவுலர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் அக்‌ஷர் படேல் மட்டும் 9வது இடத்தில் உள்ளார். அமித் மிஸ்ரா 12வது இடத்திலும் அஷ்வின் 18வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் படிக்க