• Download mobile app
12 Apr 2026, SundayEdition - 3714
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுனாமியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

December 26, 2016 தண்டோரா குழு

சுனாமியில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருக்கு, சென்னை மெரினா கடற்கரையில் உறவினர்கள், பொதுமக்கள் பேரணியாக சென்று கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

2004 ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக சுனாமி பேரலைகள் எழுந்து கடற்கரைப் பகுதிகளைத் தாக்கின.

தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது.

வீடுகளையும், உடமைகளையும் நாசமாயின.

சுனாமி தாக்குதல் நடந்து, 12 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில், மக்கள், மெழுகுவர்த்திகளை ஏந்தியும், கடலில் பால் கொட்டியும் ஆயிரக்கணக்கானோர் திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தினர். நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பிற கடற்கரை பகுதிகளிலும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதியில் 3500க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களின் அன்றாடப் பணிக்குச் செல்லவில்லை. 1500க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டன.

மேலும் படிக்க