• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சராக பன்னீர் செல்வம் சிறப்பாக செயல்படுகிறார் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

December 24, 2016 தண்டோரா குழு

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சிறப்பாக பணியாற்றுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெரியாரின் 43-வது நினைவு தினம் சனிக்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்” என்று பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் உடன் கருத்து முரண்பாடு இருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “பதில் ஏதும் கூறி திருநாவுக்கரசரின் மனத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை” என்று கூறினார்.

மேலும் படிக்க