• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்

April 25, 2017 findmytemple.com

சுவாமி : கைலாசநாதர்.

மூர்த்தி : விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியர், சனீஸ்வரர்.

தலச்சிறப்பு :

தேதியூரிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விஷ்ணுபுரம் உள்ளது. ஸ்ரீ மகாவிஷ்ணு வைகுண்டத்திலிருந்து வந்து அங்கு தங்கியதால் விஷ்ணுபுரம் என்ற பெயர் வந்தது. மொட்டைக் கோபுரத்துடன் கூடிய கிழக்குப் பார்த்த கோவில். பெரிய பாணத்துடன் கூடிய சிவலிங்கம்.

அம்பாள் விக்ரகம் சுமார் ஐந்தடி உயரமிருக்கும். கால பைரவரின் கற்சிலை ஒன்று மண்டபத்தில் மேற்குப் பார்த்தபடி உள்ளது. ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சன்னதிக்குப் பக்கத்தில் கிழக்கு நோக்கிய விநாயகரின் சன்னதி அமைந்துள்ளது. ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சனீஸ்வரர் சன்னதிகளும் உள்ளன.

இதுவரை நடந்துள்ள மகா கும்பாபிஷேகங்கள் :

ஸ்ரீ முக வருடம் கார்த்திகை மாதம் 9ம் தேதி 1873ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.காளயுத்தி வருடம் தை மாதம் 27ம் தேதி ஞாயிறு பிப்ரவரி 1919.

பார்த்திப வருடம் ஐப்பசி மாதம் 8ம் தேதி புதன் 24-10-1945.

விஸ்வவாசு வருடம் ஆவணி மாதம் 6ம் தேதி ஞாயிறு 22.8.1965.

சிவ விஷ்ணு மாரியம்மன் சாஸ்தா ஆலயங்கள் கும்பாபிஷேகம்.

பிரஜோத்பத்தி வருடம் தை மாதம் 15ம் தேதி புதன் 29-1-1992.

விக்ருதி வருடம் ஆனி மாதம் 3ம் தேதி வியாழன் 17-6-2010.

நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.கோவில் முகவரி : ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்,விஷ்ணுபுரம், கும்பகோணம், தஞ்சாவூர்.

மேலும் படிக்க