October 27, 2026
தண்டோரா குழு
இந்தியாவில் ஆம்வே இந்தியா, நாட்டின் முக்கிய சந்தைகளில் தனது நேரடி இருப்பை விரிவுபடுத்துவதாக அறிவித்தது.
இந்த விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்தைக் குறிக்கும் வகையில், ஆம்வே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மைக்கேல் நெல்சன், குருகிராமில் ஆம்வேயின் புதிய கடையைத் திறந்து வைத்தார். இந்த விரிவாக்கமானது, கடந்த ஆண்டு மைக்கேல் அறிவித்த ரூ.100 கோடி முதலீட்டின் தொடர்ச்சியாகும். நிறுவனத்தின் நேரடி இருப்பை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளுக்காக இந்த முதலீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஆம்வே இந்தியா தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் புதிய கடையைத் திறந்துள்ளது. இதன் மூலம், தனது தயாரிப்புகளையும் பிராண்ட் அனுபவங்களையும் நுகர்வோருக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்வதுடன், பிரத்யேக தளத்தையும் வழங்குகிறது.
இந்த நிகழ்வில் பேசிய ஆம்வே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மைக்கேல் நெல்சன், எங்கள் விநியோகஸ்தர்கள் இந்த மாறிவரும் தேவைகளை சிறப்பான முறையில் பூர்த்தி செய்ய உதவும் நவீன, அனுபவப் பூர்வமான இடங்களை உருவாக்குவதே எங்கள் தொலைநோக்கு பார்வையாகும். இந்த மையங்கள் தயாரிப்புகளை அறிந்துகொள்ளுதல், அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைக்கின்றன, இதனால் விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களுடன் ஆழமான உறவுகளை உருவாக்கவும், சிறந்த மதிப்பை வழங்கவும் முடிகிறது.
குருகிராமில் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் திறக்கப்பட்டது இந்தியாவில் ஆம்வே -யின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும், என்று கூறினார்.ஆம்வே இந்தியா நிர்வாக இயக்குநர் ரஜ்னீஷ் சோப்ரா அவர்கள், “இந்தியாவில் எங்கள் நுகர்வோர் மற்றும் விநியோகஸ்தர் அனுபவத்தை நாங்கள் எவ்வாறு மேம்படுத்துகிறோம் என்பதில் நேரடிக் கடைகளின் இருப்பு ஒரு முக்கியமான பகுதியாகும். எங்கள் விநியோகஸ்தர்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் ஈடுபடவும் சமூகங்களை உருவாக்கவும் ஒரு வலிமையான தளத்தை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஈடுபாட்டு மையங்களாகும்.என்று கூறினார்.
தற்போது நாடு முழுவதும் 85க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ள ஆம்வே இந்தியா, சமீபத்திய மாதங்களில் தனது சில்லறை வணிக மாற்றப் பயணத்தை வலுப்படுத்தியுள்ளது. புனே, கொல்கத்தா, சிலிகுரி, இம்பால், பாகல்பூர், ஆனந்த், அகமதாபாத், போங்கைகாவ், ஆக்ரா மற்றும் நாந்தேட் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் நிறுவனம் ஏற்கனவே 14க்கும் மேற்பட்ட கடைகளைத் திறந்து புதுப்பித்துள்ளது, இது பெருநகரங்கள், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சந்தைகளில் சமநிலையான விரிவாக்கத்தை வெளிப்படுத்துகிறது. எதிர்காலத்தைப் பொறுத்தவரை, அடுத்த 3-4 ஆண்டுகளில் மேலும் பல கடைகளைத் திறக்க அல்லது புதுப்பிக்க நிறுவனம் திட்டத்தை வகுத்துள்ளது.