• Download mobile app
28 Oct 2026, WednesdayEdition - 3913
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜி ஸ்கொயர் குழுமம் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஒன் ஹோம்ஸ் இடையே வீட்டு கட்டுமானத்தில் இணைந்து செயல்பட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்!

October 28, 2026 தண்டோரா குழு

இந்தியாவின் மாபெரும் வீட்டுமனை மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் குழுமம் , ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் கீழ் இயங்கும் ஜேஎஸ்டபிள்யூ ஒன் பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ ஒன் ஹோம்எஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தக் கூட்டு செயல்பாடு குறித்து ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான பாலா ராமஜெயம் அவர்கள் கூறுகையில்,

இந்த ஒப்பந்தத்தின்படி, ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் ‘வீட்டு கட்டுமான தள பங்குதார நிறுவனமாக செயல்படும். நிலங்களை வாங்கி ஒருங்கிணைத்து வீட்டுமனைகளாக விற்பதில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிபுணத்துவமும், ஜேஎஸ்டபிள்யூ ஒன் ஹோம்எஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டுமான தளமும் இணைந்து, வீடு கட்டுவதை மிகவும் வசதியானதாகவும், வெளிப்படையானதாகவும், தரமானதாகவும் மாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளன.. இந்த கூட்டு செயல்பாட்டின் மூலம், ஜி ஸ்கொயர் குழுமம் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஒன் ஹோம்எஸ் ஆகிய இரு நிறுவனங்களும் வீட்டுமனை உடைமைக்கும் வீட்டு நிர்மாணத்திற்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதையே தங்களது இலக்காக நிர்ணயித்துள்ளன.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகள், பட்ஜெட் மற்றும் காலக்கெடுவுக்கு ஏற்ற கட்டுமானத் தீர்வுகளை எளிதில் ஆராய்ந்து தேர்வு செய்ய இது வழிவகுக்கிறது.வீட்டுமனை வாங்குபவர்களுக்கு செலவு குறித்த தகவல்களை தெளிவான விவரங்களுடனும் ஒருங்கிணைந்த வீட்டு கட்டுமான அனுபவத்தை வழங்குவதை இந்தக் கூட்டு முயற்சி உறுதி செய்யும். வீட்டுமனை வாங்கும் வாடிக்கையாளர்களை ஜேஎஸ்டபிள்யூ ஒன் ஹோம்எஸ் -ன் அதிநவீன தொழில்நுட்ப அடிப்படையிலான வீட்டு கட்டுமான தளத்துடன் இணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டிற்கு தேவையான சிறப்பம்சங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும்.

மேலும் அவர்கள் முன்கூட்டியே தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், கட்டுமானச் செலவுகளைத் திட்டமிடவும் இது உதவுகிறது.ஜேஎஸ்டபிள்யூ ஒன் ஹோம்எஸ் வழங்கும் அதிநவீன தொழில்நுட்ப அடிப்படையிலான வீட்டு கட்டுமான தளம், கட்டுமானப் பணிக்கு ஒரு முறையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கொண்டுவருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் இருக்கும் ஜி ஸ்கொயர் குழுமத்தின் பலமும் இத்துடன் இணையும்போது, வீட்டுமனையில் சொந்தமாக வீடு கட்டும் பயணம் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித இடையூறுகளும் இல்லாத ஒரு அருமையான அனுபவமாக மாறுகிறது.

கட்டுமானத்தைத் திட்டமிடுவது மற்றும் அதை செயல்படுத்துவது போன்றவற்றில் வாடிக்கையாளர்கள் இனி கவலை இல்லாமல் சுலபமாக வீட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளமுடியும். என்றார்.

மேலும் படிக்க