• Download mobile app
28 Oct 2026, WednesdayEdition - 3913
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரேமம் ஆபரணம் – பிரேமம் சில்க்ஸ் இரண்டு நாள் கண்காட்சி தொடக்கம்!

October 28, 2026 தண்டோரா குழு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வைர நகைகள் மற்றும் பாரம்பரிய பட்டுப் புடவைகளை ஒரே இடத்தில் பார்வையிட்டுத் தேர்வு செய்யும் வகையில், கோவை ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் பிரேமம் ஆபரணம் மற்றும் பிரேமம் சில்க்ஸ் நிறுவனங்களின் இரண்டு நாள் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது.

இந்தக் கண்காட்சியில், பிரேமம் ஆபரணம் சார்பில் இயற்கை வைரங்கள் மற்றும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களால் தயாரிக்கப்பட்ட மோதிரங்கள், காதணிகள், பிரேஸ்லெட்கள், நெக்லஸ்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகளிலான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அன்றாடம் அணிவதற்கான எளிய நகைகள் முதல் ஆடம்பரமான பிரத்யேக நகைகள் வரை, ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான நகைகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், பிரேமம் சில்க்ஸ் சார்பில், பல்வேறு வண்ணங்கள், நெசவு முறைகள் மற்றும் கைவினை வேலைப்பாடுகளுடன் கூடிய 1,300-க்கும் மேற்பட்ட ரகங்களிலான பாரம்பரிய பட்டுப் புடவைகள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பிரத்யேக வடிவமைப்புகளுடன் கூடிய புடவைகள் தேர்வு செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியின் சிறப்பம்சமாக, வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்வதுடன் நேரடி இசைக் கச்சேரியையும் ரசிக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரேமம் ஆபரணம் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்வர்ணமுகி ரகுபதி கூறுகையில்,

“ஐந்து மாதங்களுக்கு முன்பு கோவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரேமம் சில்க்ஸ் பட்டுப் புடவைகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது பிரேமம் ஆபரணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், இயற்கை வைரங்கள் மற்றும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான நகைகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புதிய பிராண்டுக்கும் வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

இந்தக் கண்காட்சி அக்டோபர் 28, 29 ஆகிய இரண்டு நாட்களும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

மேலும் படிக்க